undefined

"அச்சமில்லா நிம்மதியான வாழ்க்கை மலரட்டும்!" - எடப்பாடி பழனிசாமி புத்தாண்டு வாழ்த்து!

 

ஆங்கிலப் புத்தாண்டு 2026 மலர்வதையொட்டி, அதிமுக சார்பில் தமிழக மக்களுக்கு வாழ்த்துச் செய்தி வெளியிட்டுள்ள எடப்பாடி பழனிசாமி, கடந்த கால அதிமுக ஆட்சியின் சாதனைகளை நினைவு கூர்ந்துள்ளார்.

புத்தாண்டை உற்சாகத்துடன் கொண்டாடும் தமிழக மக்கள் அனைவருக்கும் தனது இதயம் கனிந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதாகக் குறிப்பிட்டுள்ளார். அதிமுக ஆட்சிக் காலங்களில் மக்கள் நலனை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு பல்வேறு முத்தான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டதாக அவர் பெருமிதம் தெரிவித்துள்ளார். மேலும், அந்த ஆட்சிக் காலத்தில் மக்கள் எவ்வித அச்சமுமின்றி, நிம்மதியுடன் வாழ்ந்ததை இந்தத் தருணத்தில் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மலர்கின்ற இப்புத்தாண்டு, மக்களுக்கு நிறைவான சந்தோஷத்தையும், செல்வத்தையும், நீடித்த ஆயுளையும் வழங்க வேண்டும் என அவர் வாழ்த்தியுள்ளார். புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் மற்றும் புரட்சித் தலைவி ஜெயலலிதா ஆகியோரது தூய வழியில், தமிழக மக்களின் வாழ்வில் ஒரு புதிய திருப்பத்தை இப்புத்தாண்டு ஏற்படுத்தட்டும் என அவர் இறைவனைப் பிரார்த்திப்பதாகத் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் 2026-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், "மக்கள் நிம்மதியாக வாழ வேண்டும்" என்ற எடப்பாடி பழனிசாமியின் இந்த வாழ்த்துச் செய்தி அரசியல் ரீதியாகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!