undefined

மேற்கூரை விழுந்து காயமடைந்த 3 பேருக்கு மேயா் பிரியா ஆறுதல்!

 

சென்னையில் பெய்த பலத்த மழையின் காரணமாகக் கட்டட மேற்கூரை இடிந்து விழுந்து காயமடைந்த மூன்று பேரை, சென்னை மாநகராட்சி மேயர் ஆர். பிரியா அவர்கள் நேற்று (வியாழக்கிழமை) மருத்துவமனைக்குச் சென்று சந்தித்து ஆறுதல் கூறினார்.

சென்னை மாநகராட்சி ஓட்டேரியில் உள்ள ஸ்ட்ராஹன்ஸ் சாலையில், 50 ஆண்டுகளுக்கும் மேல் பழமையான கட்டடம் ஒன்று உள்ளது. இங்கு உணவகங்கள் செயல்பட்டு வந்தன. மழையின் காரணமாக, கடந்த டிசம்பர் 2-ஆம் தேதி இரவு அந்தக் கட்டடத்தின் மேற்கூரை திடீரென இடிந்து விழுந்தது.

இதில் அபிஸ் (38), சரிபாபானு (39), அயூப்கான் (40) ஆகிய மூவர் காயமடைந்தனர். அவர்கள் தற்போது கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேயர் ஆர். பிரியா அவர்கள் நேற்று மருத்துவமனைக்குச் சென்று காயமடைந்த மூவரையும் சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும், அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை முதன்மையர் (டீன்) கவிதா மற்றும் கண்காணிப்பாளர் பாஸ்கர் உள்ளிட்டோர் இந்தச் சந்திப்பின்போது உடனிருந்தனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!