undefined

Cetezon  உட்பட புதுச்சேரியில் தரமில்லாத மருந்துகள் விற்பனைக்கு தடை!  

 
 

 

புதுச்சேரி மருந்து கட்டுப்பாட்டு துறை, தரமில்லாத இரண்டு மாத்திரைகள் விற்பனை செய்யப்படுவதைக் கண்டுபிடித்து அவற்றுக்கு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. திருபுவனையில் செயல்படும் குறிப்பிட்ட மருந்து நிறுவனங்களின் உற்பத்தியுக்கும் தடை விதிக்கப்பட்டு, அவற்றை உடனடியாக திருப்பி அனுப்புமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

துறை அதிகாரி ஆனந்த கிருஷ்ணன் வெளியிட்ட சுற்றறிக்கையில், குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த ஹெல்த்கேர் பார்முலேஷன் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் FORCIP-500 மற்றும் மத்திய பிரதேசத்தின் சூப்பர் எஸ் லேபரட்டரியின் Cetezon tablet போன்ற மருந்துகள் நிலையான தரம் இல்லை என்றும், இதனால் அவற்றை வாங்குதல், விற்பனை செய்வது தடை செய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் திருபுவனையில் ரெல்சன் ஹெல்த்கேர் மருந்து உற்பத்தி நிறுவனம் விதிமுறைகளை மீறியுள்ளது என்றும், அந்த நிறுவனம் தனது மருந்துகள் உற்பத்தியை நிறுத்துமாறு கட்டுப்பாட்டு துறை உத்தரவிட்டுள்ளது. அனைத்து சில்லறை மற்றும் மொத்த மருந்து விநியோகஸ்தர்களும் துறைக்கு உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!