10 கோடி முதலீடு... 100 கோடி லாபம்... நடிகை மீனா ஸ்மார்ட் முடிவு... !
தமிழ் திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, ரஜினி, கமல் எனப் பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து 90-களில் கனவுக்கன்னியாக வலம் வந்தவர் நடிகை மீனா. 2009-ல் திருமணத்திற்குப் பிறகு நடிப்பில் சிறிய இடைவெளி விட்டவர், தனது கணவர் வித்யாசாகரின் மறைவுக்குப் பின் தற்போது குணச்சித்திர வேடங்களில் மீண்டும் பிஸியாகி வருகிறார். இந்நிலையில், 20 ஆண்டுகளுக்கு முன்பு அவர் எடுத்த ஒரு புத்திசாலித்தனமான முதலீடு, தற்போது அவருக்கு ரூ.100 கோடி மதிப்பிலான ஜாக்பாட்டைத் தேடித் தந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு, தனது உழைப்பில் ஈட்டிய வருமானத்தைக் கொண்டு ரூ.10 கோடி மதிப்பிலான ஒரு பிரம்மாண்ட பங்களாவை மீனா கட்டியிருந்தார். நவீனக் கட்டிடங்களுக்கு மத்தியில், கலைநயத்துடனும் பாரம்பரிய வேலைப்பாடுகளுடனும் அமைக்கப்பட்ட அந்த வீட்டின் மீது அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு தம்பதியினர் நீண்ட நாட்களாகக் கண் வைத்துள்ளனர். அந்த வீட்டினை எப்படியாவது வாங்கிவிட வேண்டும் எனத் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வந்த அவர்களிடம், தற்போது சுமார் ரூ.100 கோடிக்கு அந்த வீட்டினை மீனா விற்றுள்ளதாகக் கூறப்படுகிறது.
இருப்பினும், இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை நடிகை மீனா இதுவரை வெளியிடவில்லை. முன்னதாக, சென்னை சாலிகிராமத்தில் உள்ள இவரது வீட்டை நகைச்சுவை நடிகர் சூரி வாங்கியதாக ஒரு வதந்தி பரவியபோது, அது உண்மையில்லை எனச் சூரி தரப்பில் மறுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. எது எப்படியோ, சினிமா வருமானத்தைச் சரியான இடத்தில் முதலீடு செய்து, பல மடங்கு லாபத்தை ஈட்டியிருக்கும் மீனாவின் இந்தத் துணிச்சலான முடிவு, திரையுலகினரிடையே "ஸ்மார்ட் பிசினஸ்" எனப் பாராட்டுகளைப் பெற்று வருகிறது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!