undefined

வெளியானது மெகா அறிவிப்பு... ரயில்வேயில் 22,195 வேலைவாய்ப்புகள்... 10வது தேர்ச்சியடைந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

 

மத்திய ரயில்வே துறையில் வேலை தேடிக்கொண்டிருக்கும் இளைஞர்களுக்கு ஒரு மிகப்பெரிய நற்செய்தி வெளியாகியுள்ளது. ரயில்வே தேர்வு வாரியம் (RRB) மூலம் 20,000-க்கும் அதிகமான பணியிடங்களுக்கு தற்போது அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இந்திய ரயில்வேயின் பல்வேறு மண்டலங்களில் காலியாக உள்ள Level 1 (Group D) பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை ரயில்வே தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்பு இந்தியா முழுவதும் உள்ள தகுதியுள்ள விண்ணப்பதாரர்களிடமிருந்து வரவேற்கப்படுகிறது.

ரயில்வே தேர்வு வாரியம் (RRB) Level 1 (Group D) - டிராக் மெயின்டெய்னர், ஹெல்பர் மற்றும் உதவியாளர் பணிகள இதில் அடங்கும்.

மொத்த காலியிடங்கள்: 22,195

சம்பளம்: ஆரம்ப ஊதியம் ₹18,000/- (இதனுடன் இதர படிகளும் உண்டு)

கல்வித் தகுதி: 10-ம் வகுப்பு (SSLC/Matriculation) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அல்லது ITI (NCVT/SCVT சான்றிதழ்) முடித்திருக்க வேண்டும். அல்லது தேசிய பயிற்சி சான்றிதழ் (NAC) பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 18 முதல் 33 வயதிற்குள் இருக்க வேண்டும்.

வயது தளர்வு: அரசு விதிகளின்படி SC/ST பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், OBC பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 முதல் 15 ஆண்டுகளும் வயது தளர்வு உண்டு.

விண்ணப்பக் கட்டணம் SC/ST/பெண்கள்/மாற்றுத்திறனாளிகள்/திருநங்கைகள்: ₹250/- (தேர்வுக்குப் பின் இது திருப்பி அளிக்கப்படும்). மற்றவர்கள்: ₹500/-

விண்ணப்பதாரர்கள் நான்கு நிலைகளில் தேர்வு செய்யப்படுவார்கள்:

கணினி வழித் தேர்வு (CBT): பொது அறிவு, கணிதம் மற்றும் அறிவியல் சார்ந்த வினாக்கள் கேட்கப்படும்.

உடல் தகுதித் தேர்வு (PET): ஓட்டம் மற்றும் எடை தூக்கும் சோதனைகள் நடத்தப்படும்.

சான்றிதழ் சரிபார்ப்பு (DV): கல்வி மற்றும் வயதுச் சான்றுகள் சரிபார்க்கப்படும்.

மருத்துவப் பரிசோதனை (ME): உடல் தகுதி உறுதி செய்யப்படும்.

விண்ணப்பிக்கத் தொடங்கும் நாள்: 31.01.2026

விண்ணப்பிக்கக் கடைசி நாள்: 02.03.2026

விண்ணப்பிக்கும் இணையதளம்: ஆர்வமுள்ளவர்கள் www.rrbapply.gov.in என்ற இணையதளம் வாயிலாக ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!