சுரங்க விபத்தில் பலி எண்ணிக்கை 27 ஆக உயர்வு!
மேகாலய மாநிலம் ஜெயின்தியா ஹில்ஸ் மாவட்டத்தில் சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த நிலக்கரி சுரங்கத்தில் வியாழக்கிழமை டைனமைட் திடீரென வெடித்தது. நிலக்கரி பிரித்தெடுப்பதற்காக பாறைகளை உடைக்க பயன்படுத்தப்பட்ட இந்த டைனமைட் வெடித்ததில் பலர் சிக்கினர். இந்த விபத்தில் ஆரம்பத்தில் 18 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது. மேலும் ஒருவர் படுகாயமடைந்தார்.
சம்பவம் குறித்து மாநில அரசு உடனடியாக விரிவான விசாரணைக்கு உத்தரவிட்டது. இதுதொடர்பாக சுரங்க உரிமையாளர்கள் 2 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில், சனிக்கிழமை விபத்து நடந்த இடத்தில் இருந்து மேலும் 2 உடல்கள் மீட்கப்பட்டன.
இதன் மூலம் சுரங்க விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27 ஆக உயர்ந்துள்ளது என்று போலீஸார் தெரிவித்தனர். இன்னும் பலர் காணாமல் போயிருப்பதாகவும், அவர்களை தேடும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் அதிகாரிகள் கூறினர். உயிரிழந்தவர்களின் அடையாளம் காணும் பணிகளும் நடைபெற்று வருகிறது. இந்த சம்பவம் குறித்து கிளிஹ்ரியத் காவல் நிலையம் தானாக முன்வந்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!