நெஞ்சை உறைய வைக்கும் சிசிடிவி காட்சிகள்... காய்கறிகள் திருடியதாக குற்றச்சாட்டு... தாய், மகள் இருவரின் முடியை பிடித்து இழுத்து கல்வீசி தாக்குதல் நடத்தும் ஆண்கள்..!
குஜராத்தின் சூரத் நகரில் வேளாண் உற்பத்தி சந்தை செயல்பட்டு வருகிறது. இந்த சந்தையில் குறிப்பிட்ட ஒரு பெண்ணும் அவரது மகளும் காய்கறிகள் திருடியதாக குற்றம் சாட்டப்பட்ட நடுத்தெருவில் பயங்கரமாக தாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் நகரின் புகழ்பெற்ற வேளாண் உற்பத்தி சந்தையான APMC மார்க்கெட்டில் நடந்திருப்பது பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவம் குறித்து போலீசார் நடவடிக்கை எடுத்து, இரண்டு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு இருப்பதாகவும் வழக்கு தொடர்ந்து விசாரணையில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில் பலரும் தங்கள் கண்டனங்களை பதிவிட்டு வருகின்றனர்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!