கட்டாய மாதவிடாய் விடுப்பு கோரிக்கை… விசாரணைக்கு உச்சநீதிமன்றம் மறுப்பு!

 

பெண்களுக்கு கட்டாய மாதவிடாய் விடுப்பு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரிக்க இந்திய உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. இதுபோன்ற சட்டம் கொண்டு வருவது வேலைவாய்ப்பில் பெண்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வாய்ப்பு உள்ளது என நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

இது குறித்து சூர்யா காந்த் தலைமையிலான அமர்வு கருத்து தெரிவித்தது. கட்டாய மாதவிடாய் விடுப்பு சட்டமாக்கப்பட்டால் சில நிறுவனங்கள் பெண்களை வேலைக்கு அமர்த்த தயங்கக்கூடும் என்று கூறப்பட்டது. இதனால் பெண்களின் வேலைவாய்ப்புகள் பாதிக்கப்படலாம் எனவும் நீதிமன்றம் குறிப்பிட்டது.

மேலும் இப்படியான சட்டம் கொண்டு வரப்பட்டால் பெண்கள் ஆண்களை விட பலவீனமானவர்கள் என்ற தவறான எண்ணம் சமூகத்தில் உருவாகக்கூடும் என்றும் நீதிமன்றம் தெரிவித்தது. எனவே இந்த மனுவை விசாரிக்க தேவையில்லை என கூறி உச்சநீதிமன்றம் மறுத்துள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!