வெடித்தது கலவரம்! மெஸ்சியின் இந்தியப் பயணம்... ரசிகர்கள் அதிர்ச்சி!
பிரபல கால்பந்து வீரர் லயோனல் மெஸ்சி 14 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா வந்துள்ளார். 3 நாள் பயணத்தின்படி, அவர் இன்று அதிகாலை கொல்கத்தா நகருக்கு வருகை தந்தார். அவருக்கு ஆயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டு உற்சாக வரவேற்பு அளித்தனர். கொல்கத்தாவில் 70 அடி உயரத்தில் நிறுவப்பட்ட மெஸ்சியின் உருவச் சிலையையும் அவர் காணொலி மூலம் திறந்து வைத்தார். அவர் கையில் உலகக் கோப்பையைப் பிடித்திருப்பது போல அந்தச் சிலை வடிவமைக்கப்பட்டிருந்தது.
78 ஆயிரம் இருக்கைகள் கொண்ட சால்ட் லேக் மைதானத்தில் ஒரு பிரம்மாண்ட நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிகழ்ச்சிக்கான டிக்கெட்டுகள் ₹7,000 வரை விற்கப்பட்டன. ஆனால், நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மெஸ்சி சில நிமிடங்கள் மட்டுமே அங்கிருந்தார். சிறிது நேரத்தில் அவர் மைதானத்தை விட்டு வெளியேறினார். மெஸ்சி மீண்டும் வருவார் என்று ரசிகர்கள் நீண்ட நேரம் காத்திருந்தனர். அவர் வராததால் ஆத்திரமடைந்த ரசிகர்கள் மைதானத்துக்குள் புகுந்து சூறையாடினர். நிலைமையைக் கட்டுப்படுத்த போலீசார் தடியடி நடத்தினர்.
ரசிகர்கள் இந்த நிகழ்வால் கடும் ஏமாற்றம் அடைந்தனர். "மெஸ்சி வெறும் 10 நிமிடங்கள் மட்டுமே இருந்தார். தலைவர்களும் அமைச்சர்களும் அவரைச் சூழ்ந்திருந்தனர். எங்களால் பார்க்க முடியவில்லை. எங்கள் பணம் வீணாகிவிட்டது," என்று ஒரு ரசிகர் வேதனையுடன் கூறினார். பலர் ₹12,000 வரை டிக்கெட் வாங்கியதாகவும், ஆனால் மெஸ்சியின் முகத்தைக் கூட பார்க்க முடியவில்லை என்றும் புகார் தெரிவித்தனர். கொல்கத்தா பயணத்தை முடித்துவிட்டு மெஸ்சி ஐதராபாத், மும்பை, டெல்லி ஆகிய நகரங்களுக்குச் செல்கிறார். 15-ம் தேதி பிரதமர் மோடியுடன் அவர் கலந்துரையாடுகிறார்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!