மெட்டா ஆட்குறைப்பு... லட்சக்கணக்கானோர் வேலை இழக்கும் அபாயம்? பீதியில் ஊழியர்கள்!
மெட்டா நிறுவனத்தில் மிகப்பெரிய நிதி மறுசீரமைப்பு நடவடிக்கைகள் தொடங்க உள்ளன. ஒருகாலத்தில் நிறுவனத்தின் எதிர்காலம் எனக் கருதப்பட்ட மெட்டாவெர்ஸ் பிரிவில், சுமார் 30% வரை பட்ஜெட் குறைக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 2021 முதல் ரியாலிட்டி லேப்ஸ் பிரிவு சந்தித்த $70 பில்லியனுக்கு மேற்பட்ட இழப்பும், முதலீட்டாளர்கள் காட்டிய அதிருப்தியும் இந்த முடிவுக்கு காரணமாகியுள்ளன.
கடந்த நவம்பரில் நடந்த உயர்மட்ட ஆலோசனையில், குவெஸ்ட் விஆர் ஹெட்செட்டுகள், ஏஆர் கண்ணாடிகள் மற்றும் ஹொரைசன் வேர்ல்ட்ஸ் போன்ற மெட்டாவின் மெட்டாவெர்ஸ் முயற்சிகள் இதுவரை இல்லாத அளவுக்கு நிதி குறைப்புக்கு உட்படுத்தப்பட உள்ளன. ஒட்டுமொத்த நிறுவனத்திலும் 10% செலவு குறைக்க உத்தரவிட்ட ஜுக்கர்பெர்க், குறிப்பாக விஆர் மற்றும் ஹொரைசன் வேர்ல்ட்ஸ் பிரிவுகளில் அதைவிட கடுமையான குறைப்புகளை மேற்கொள்ளச் சொல்லியுள்ளார். மெட்டாவெர்ஸ் உலகளாவிய ஆதிக்கத்தைப் பெறும் என்ற கணிப்பு தவறியதால், பயனாளர் வளர்ச்சி மந்தமாகியதால், அப்பிரிவை மூட வேண்டுமென முதலீட்டாளர்கள் வலியுறுத்தும் நிலையும் உருவாகியுள்ளது.
இந்த மாற்றங்களுடன், மெட்டாவில் முக்கியத்துவம் பெறும் புதிய துறை AI தொழில்நுட்பமாக மாறியுள்ளது. லார்ஜ் லாங்குவேஜ் மாடல்கள், AI அசிஸ்டெண்டுகள், ரே-பான் ஸ்மார்ட் கண்ணாடிகள் போன்ற அணியக்கூடிய சாதனங்களில் ஜுக்கர்பெர்க் கவனம் திருப்பியுள்ளார். நிறுவனத்தின் எதிர்கால வருவாய் இயந்திரமாக AI உருவாகும் நிலையில், மெட்டாவெர்ஸை மையமாகக் கொண்ட வேலைகள் ஆயிரக்கணக்கில் பாதிக்கப்படலாம் என கூறப்படுவது பணியாளர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!