மெட்ரோ பணியில் விபத்து… 50 அடி உயரத்தில் இருந்து விழுந்த தொழிலாளர் பலி!
சென்னை வளசரவாக்கம் ஆற்காடு சாலையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று வருகின்றன. இங்கு ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த சோரே கஞ்சு (23) கடந்த 11 மாதங்களாக ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வந்தார். நேற்று 185-வது தூணில் ஏறி வேலை செய்து கொண்டிருந்தார்.
அப்போது திடீரென நிலை தடுமாறி சுமார் 50 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்தார். இதில் தலையிலும் உடலிலும் பலத்த காயம் ஏற்பட்டது. அருகில் இருந்த தொழிலாளர்கள் உடனடியாக அவரை மீட்டனர்.
பின்னர் போரூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. ஆனால் அவர் ஏற்கனவே உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து வளசரவாக்கம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!