undefined

  மெட்ரோ ரயில் கட்டணம் உயர்வு…பயனர்கள் அதிர்ச்சி  

 
 

பெங்களூரில் மெட்ரோ ரயில் கட்டணத்தை ரூ.1 முதல் ரூ.5 வரை உயர்த்த பெங்களூரு மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் அறிவித்துள்ளது. இந்த கட்டண உயர்வு பிப்ரவரி 9 முதல் அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்டண உயர்வு பயணிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அரசியல் கட்சிகள் இடையே குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

பெங்களூரு தெற்கு தொகுதி பாஜக எம்.பி. தேஜஸ்வி சூர்யா, கட்டண உயர்வை நிறுத்த மத்திய அமைச்சர் மனோகர் லால் கட்டார் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியதாக தெரிவித்துள்ளார். மெட்ரோ பயணிகளுடன் கலந்துரையாடிய அவர், கட்டண உயர்வுக்கு மத்திய அரசு காரணம் என மாநில அரசு கூறுவது தவறு என்று குற்றம்சாட்டினார். மேலும், கட்டண நிர்ணயக் குழு அமைக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

மத்திய அமைச்சர் ஹெச்.டி.குமாரசாமி, கட்டணத்தை உயர்த்த வேண்டாம் என்று மத்திய அரசு கேட்டுக்கொண்ட போதிலும் மாநில அரசு உயர்த்தியதாக கூறினார். ஆனால், மெட்ரோ நிர்வாகம் கட்டண உயர்வை திரும்ப பெற எந்த உத்தரவும் வரவில்லை என தெரிவித்துள்ளது. எனவே திங்கள்கிழமை முதல் கட்டண உயர்வு அமலுக்கு வரும் என கூறப்பட்டுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!