இன்று முதல் 3 நாட்களுக்கு மெட்ரோ ரயில்கள் ஞாயிறு அட்டவணைப்படி இயக்கம்!
Jan 15, 2026, 05:50 IST
தமிழகத்தில் பொங்கல் திருவிழாவினையொட்டி தொடர்ந்து 5 நாட்கள் பள்ளி, கல்லூரிகளுக்கும், அரசு அலுவலகங்களுக்கும் விடுமுறை தினங்களாக அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், பொதுமக்களின் வசதியை முன்னிட்டு, வரும் ஜனவரி 17ம் தேதி வரையில் சென்னை மெட்ரோ ரயில் சேவை ஞாயிற்றுக்கிழமை கால அட்டவணைப்படி இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நண்பகல் 12 மணி முதல் இரவு 8 மணி வரை 7 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும். இரவு 10 மணி முதல் 11 மணி வரை 15 நிமிட இடைவெளியில் சேவை வழங்கப்படும். பொங்கல் விடுமுறையில் பயணிகள் வசதிக்காக இந்த மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!