டிக்கெட் இல்லாமல் ஓடிய இளைஞர்... மெட்ரோ ரயில் நிறுத்தப்பட்டதால் பெரும் பரபரப்பு!
சென்னை கோயம்பேடு மெட்ரோ ரயில் நிலையத்தில் நேற்று திடீர் பரபரப்பு ஏற்பட்டது. டிக்கெட் ஏதும் இல்லாமல் வந்த இளைஞர் ஒருவர், டிக்கெட் ஸ்கேனிங் பகுதியை தாண்டி குதித்து வேகமாக ஓடினார். பின்னர் பிளாட்பாரத்தில் நின்ற மெட்ரோ ரயிலுக்குள் ஏறி தரையில் அமர்ந்தார்.
இதனால் அதிர்ச்சியடைந்த மெட்ரோ ஊழியர்கள் பாதுகாப்பு கருதி உடனடியாக ரயிலை நிறுத்தினர். ரயிலுக்குள் அந்த இளைஞர் அழுதபடியே “என் வாழ்க்கை போச்சு” என அலறியதால் பயணிகள் பதற்றமடைந்தனர். தகவலறிந்து வந்த மெட்ரோ போலீசார் அவரை கட்டுப்படுத்தி வெளியே அழைத்துச் சென்றனர்.
போலீசார் விசாரணையில், அந்த இளைஞர் வீரவேல் என்பதும், ஸ்ரீபெரும்புதூர் பகுதியைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. முன்னதாக ஏற்பட்ட விபத்தில் தலையில் காயம் காரணமாக அவர் மனநலம் பாதிக்கப்பட்டுள்ளதாக குடும்பத்தினர் தெரிவித்தனர். சம்பவத்துக்குப் பிறகு மெட்ரோ சேவை வழக்கம்போல் தொடரப்பட்டது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!