நாளை ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ இயக்கம்!
குடியரசு தினத்தை முன்னிட்டு நாளை (ஜன.26) சென்னை மெட்ரோ ரயில்கள் ஞாயிறு அட்டவணைப்படி இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சிறப்பு தினங்கள் மற்றும் அரசு விடுமுறை நாட்களில் மாற்றியமைக்கப்பட்ட நேர அட்டவணை நடைமுறையில் இருக்கும்.
சென்னை மெட்ரோ நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், காலை 5 மணி முதல் பகல் 12 மணி வரையும், இரவு 8 மணி முதல் 10 மணி வரையும் 10 நிமிட இடைவெளியில் ரயில்கள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் நண்பகல் 12 மணி முதல் இரவு 8 மணி வரை 7 நிமிட இடைவெளியிலும், இரவு 10 மணி முதல் 11 மணி வரை 15 நிமிட இடைவெளியிலும் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!