மெக்சிகன் கடற்படை விமானம் கடலில் விழுந்து 5 பேர் பலி... பகீர் வீடியோ!
டெக்சாஸ் மாநிலம் கால்வெஸ்டன் விரிகுடா கடலில் மருத்துவ நோயாளிகளை ஏற்றிச் சென்ற மெக்சிகன் கடற்படை விமானம் விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் குறைந்தது ஐந்து பேர் உயிரிழந்ததாக அமெரிக்க கடலோர காவல்படை தெரிவித்துள்ளது. மேலும் ஒருவர் காணாமல் போயுள்ளதால் தேடுதல் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
விமானத்தில் மொத்தம் எட்டு பேர் பயணித்தனர். இதில் நான்கு பேர் மெக்சிகன் கடற்படை ஊழியர்கள், நான்கு பேர் பொதுமக்கள் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தீக்காயமடைந்த நோயாளிகளை சிகிச்சைக்காக அழைத்து வரும்போதே இந்த விபத்து நிகழ்ந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
அடர்ந்த கடல் மூடுபனி காரணமாக பார்வை திறன் மிகவும் குறைந்திருந்ததாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர். விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் கடலோர காவல்படை, டைவ் குழு, ட்ரோன் பிரிவு உள்ளிட்டோர் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். விபத்துக்கான காரணம் குறித்து அமெரிக்க மற்றும் மெக்சிகன் அதிகாரிகள் இணைந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!