மாடுகளுக்கு மைக்ரோ சிப் உரிமம் கட்டாயம்... மாநகராட்சி அதிரடி அறிவிப்பு!

 
 

 

சென்னையில் மாடுகளுக்கு மைக்ரோ சிப் பொருத்தி உரிமம் பெற வேண்டும் என்ற முக்கிய தீர்மானம் மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. மாட்டின் உரிமையாளர்கள் ரூ.100 கட்டணம் செலுத்தி இந்த உரிமத்தை பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நகரில் தெருக்களில் சுற்றித் திரியும் மாடுகள் காரணமாக விபத்துகள் அதிகரித்து வருவதை தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மாடுகளின் உரிமையாளரை எளிதில் கண்டறிய மைக்ரோ சிப் உதவும் என மாநகராட்சி தெரிவித்துள்ளது.

மார்ச் 18ம் தேதிக்குள் அனைத்து மாடுகளுக்கும் மைக்ரோ சிப் பொருத்தி உரிமம் பெறுவது கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது. காலக்கெடுவுக்குள் உரிமம் பெறாதவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!