நடுவானில் பறவை மோதல்... விமானம் அவசர அவசரமாக தரையிறக்கம்!
உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூரில் இருந்து கர்நாடகாவின் பெங்களூருவுக்கு நேற்று இரவு இண்டிகோ விமானம் புறப்பட்டது. இந்த விமானத்தில் 216 பயணிகள் பயணம் செய்தனர். வழக்கம்போல் விமானம் உத்தரபிரதேச வான்பரப்பில் நடுவானில் பறந்து கொண்டிருந்தது.
அப்போது திடீரென விமானத்தில் பறவைகள் மோதியதாக கூறப்படுகிறது. இதனால் விமானத்தின் முகப்பு பகுதியில் சிறிதளவு சேதம் ஏற்பட்டது. பாதுகாப்பு கருதி உடனடியாக விமானத்தை வாரணாசி விமான நிலையத்தில் விமானி தரையிறக்கினார்.
இந்த சம்பவத்தில் பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக இருந்தனர். யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. பின்னர் மாற்று விமானம் ஏற்பாடு செய்யப்பட்டு, பயணிகள் அனைவரும் பெங்களூருவுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!