ராணுவ வாகனம் கவிழ்ந்து விபத்து.. 2 வீரர்கள் பலி!
அருணாச்சலப் பிரதேசத்தில் ராணுவ வாகனம் பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் 2 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். ராணுவத்தின் தகவலின்படி இந்த விபத்து மார்ச் 7 ம் தேதி சுபன்சிரி மாவட்டத்தில் நடந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய–சீன எல்லைக்கு அருகிலுள்ள ரெட்டி கிராமம் பகுதியில் ஆபரேஷன் ஸ்னோ லெப்பர்டின் கீழ் பணிக்காக கெலெமோவிலிருந்து டாக்ஸிங் நோக்கி ராணுவ வாகனம் சென்று கொண்டிருந்தபோது கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்ததாக கூறப்படுகிறது.
இந்த விபத்தில் 56 பீரங்கி படையணியின் 908 ஃபீல்ட் படைப்பிரிவைச் சேர்ந்த நைப் சுபேதார் குல்வந்த் சிங் மற்றும் உத்தரபிரதேசம் ரேபரேலி மாவட்டத்தைச் சேர்ந்த 18 சீக்கிய படைப்பிரிவின் நாயக் பிரதீப் குமார் சர்மா ஆகியோர் உயிரிழந்தனர். இந்த விபத்து குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!