அமைச்சர் பொன்முடி பதவி பறிபோகுமா...?  சொத்துக்குவிப்பு வழக்கில் 21ம் தேதி தீர்ப்பு!

 

தமிழகத்தின் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி. இவர்  கடந்த 1996 முதல் 2002  வரை  வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக  வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.   லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார்  அமைச்ச்சர் பொன்முடிக்கு  3 கோடியே 8 லட்சத்து 35 ஆயிரத்து 66 மதிப்பிலான சொத்துக்கள்  சட்டவிரோதமாக    இருப்பதாக குற்றம் சாட்டியிருந்தது. இது குறித்த வழக்கு  விழுப்புரம் முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந் நிலையில்,  அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி மீதான குற்றச்சாட்டை நிரூபிக்க    போதுமான ஆதாரங்கள் எதுவுமில்லை என விடுவிக்கப்பட்டுள்ளனர்.  


சொத்து குவிப்பு வழக்கில் அமைச்சர் பொன்முடியை விடுவித்த வழக்கில்  சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கு நவம்பர் 10ம் தேதி நடைபெற்றது.  இதில் மோசமான முறையில் விசாரணை நடத்தப்பட்டுள்ளதால் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளதாக விளக்கம் அளிக்கப்பட்டது.  
இதனையடுத்து சொத்துக் குவிப்பு வழக்கை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரிப்பதை எதிர்த்து, அமைச்சர் பொன்முடி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார்.

  
இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்றம்   கீழமை நீதிமன்ற தீர்ப்பை தள்ளுபடி செய்து, அவரையும், அவரது மனைவியையும் குற்றவாளி என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.  அமைச்சர் பொன்முடி மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை விபரங்கள்  டிசம்பர் 21ம் தேதி வழங்கப்படும். இதற்காக அமைச்சர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது.  அதில்  2 ஆண்டுகள் அவருக்கு தண்டணை விதிக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகி வரும் நிலையில் அது உறுதி செய்யப்பட்டால் அவரது அமைச்சர் பதவி பறிபோகும் நிலை உருவாகும் .   

மார்கழிக் கோலத்தில் மட்டும் பூசணிப்பூ வைப்பது ஏன்?!

மார்கழி மாதத்தில் இந்த தவற மட்டும் செய்யாதீங்க!

மார்கழி மாதத்துக்கு இத்தனை சிறப்புகளா? விரதமுறை, பலன்கள்!!

மார்கழி மாதம் ஏன் திருமணம் செய்யக்கூடாது... பிரமிக்க வைக்கும் விஞ்ஞான உண்மைகள்!