undefined

தெருநாயை வளர்ப்பு நாயாக ஏற்றுக்கொண்ட அமைச்சர் பி.டி.ஆர்... கால் உடைந்த நாய்க்கு மெட்டல் பிளேட் வைத்து அறுவைசிகிச்சை!

 

தமிழக தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், கால் உடைந்த நிலையில் மீட்கப்பட்ட ஒரு தெருநாயைத் தனது வளர்ப்புப் பிராணியாகச் சென்னை மாநகராட்சியில் அதிகாரப்பூர்வமாகப் பதிவு செய்துள்ளார். ஒரு அமைச்சராகப் பிஸியான அரசியல் பணிகளுக்கு இடையே, ஆதரவற்ற வாயில்லா ஜீவன் மீது அவர் காட்டியுள்ள இந்தப் பெருங்கருணை சமூக வலைதளங்களில் பலரது பாராட்டுகளைப் பெற்று வருகிறது. அந்த நாய்க்கு 'பீச்சஸ்' (Peaches) என்று பெயரிட்டு, தற்போது தனது குடும்பத்தில் ஒரு உறுப்பினராகவே அவர் அரவணைத்து வருகிறார்.

இது குறித்து அமைச்சர் தனது எக்ஸ் (X) தளத்தில் உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "கடந்த 2021-ஆம் ஆண்டு நான் அமைச்சராகப் பொறுப்பேற்ற சில மாதங்களிலேயே, தலைமைச் செயலகத்தில் உள்ள எனது அலுவலகத்திலிருந்து வெளியே வரும்போது, கால் உடைந்த நிலையில் ஒரு நாய் துடித்துக் கொண்டிருப்பதைக் கண்டேன். அங்கிருந்த பல நாய்களில் அதுவும் ஒன்று. ஏதோ ஒரு விபத்தில் அதன் கால் கடுமையாகப் பாதிக்கப்பட்டு இருந்தது" என்று குறிப்பிட்டுள்ளார். அந்த நாயின் துயரத்தைக் கண்டு கலங்கிய அமைச்சர், உடனடியாக அதற்கு மருத்துவச் சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்தார்.

அந்த நாயின் கால் எலும்பு முறிந்திருந்ததால், அதற்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு மெட்டல் பிளேட் மற்றும் ஸ்க்ரூக்கள் பொருத்தப்பட்டன. சுமார் மூன்று மாத கால நீண்ட சிகிச்சைக்குப் பிறகு அந்த நாய் குணமடைந்தது. "சிகிச்சை முடிந்து அந்த நாயை மீண்டும் அதே இடத்திற்கே (தலைமைச் செயலகம்) கொண்டு போய் விட எங்களுக்கு மனது வரவில்லை. அதனால், அதை எங்கள் வீட்டிற்கே அழைத்துச் சென்று வளர்க்கத் தொடங்கினோம். அதற்கு 'பீச்சஸ்' என்று பெயரிட்டோம். அது இன்று எங்களின் செல்லப் பிள்ளையாக மாறிவிட்டது" என்று அமைச்சர் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, தலைமைச் செயலக வளாகத்தில் இருந்த தெருநாய்கள் அங்கிருந்து அகற்றப்பட்டன. ஆனால், அமைச்சரின் வீட்டில் வளர்ந்து வந்த 'பீச்சஸ்', சென்னை மாநகராட்சியின் புதிய விதிமுறைகளின்படி தற்போது முறையாகப் பதிவு செய்யப்பட்டு, உரிமம் பெறப்பட்டுள்ளது. அமைச்சரின் இந்தச் செயல், தெருநாய்களைத் தத்தெடுத்து வளர்க்க வேண்டும் என்ற விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தியுள்ளது. "நாய்களில் இனம் பார்ப்பதை விட, அன்பு காட்டுவதே முக்கியம்" என்பதைத் தனது செயலின் மூலம் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மெய்ப்பித்துள்ளார்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!