செங்கோட்டையன் பாஜகவின் ஸ்லீப்பர் செல்... அமைச்சர் ரகுபதி கடும் தாக்கு! 

 
 

தமிழகம் முழுக்க அரசியல் சூழலை கலக்கிய முடிவாக, அதிமுகவின் முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் நேற்று பனையூரில் நடந்த நிகழ்ச்சியில் முதல்வர் விஜய் முன்னிலையில் தவெகவில் இணைந்தார். அவருடன் நூற்றுக்கும் மேற்பட்ட ஆதரவாளர்களும் இணைந்த நிலையில், உடனடியாக நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் பொறுப்பும், கொங்கு மண்டலத்தின் நான்கு மாவட்டங்களுக்கான அமைப்புச் செயலாளர் பதவியும் வழங்கப்பட்டது. 50 ஆண்டுகள் அதிமுகவில் பயணித்த செங்கோட்டையனின் இந்த மாற்றம் தவெகவின் கொங்கு வலிமையை பெருக்கும் என அரசியல் வட்டாரங்கள் கணித்து வருகின்றன.

இதையடுத்து பல்வேறு தரப்பில் எதிரொலிகள் எழுந்துள்ளன. மதுரையில் செய்தியாளர்கள் கேள்விக்கு பதில் அளிக்கும்போது அதிமுக பொதுச் செயலாளர் பழனிச்சாமி, “அவர் அதிமுகவில் இல்லை... அதற்கு பதில் சொல்ல தேவையில்லை” என்று கூறிவிட்டு பேச்சை முடித்தார். இதேவேளை திமுக அமைச்சர் ரகுபதி புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம், செங்கோட்டையனை “பாஜக ஸ்லீப்பர் செல்” என சர்ச்சைக்குரிய வகையில் குற்றம் சாட்டினார்.

“அமித்ஷாவை பதவி ஏதும் இல்லாமல் சந்தித்ததே உதாரணம். பாஜக வேலைகளை நிறைவேற்ற அறிவுறுத்தப்பட்டு தவெகவுக்கு அனுப்பப்பட்டவர்” என்ற ரகுபதியின் கூற்று தற்போது அரசியல் மேடையில் புதிய விவாதத்தை உண்டாக்கியுள்ளது. செங்கோட்டையனின் தரப்பில் பதில் வராத நிலையில், இந்த சேர்க்கை அடுத்த தேர்தலில் என்ன விளைவுகளை தரும் என்ற கேள்வி அரசியல் வட்டாரத்தில் தீவிரமாக பேசப்பட்டுக் கொண்டிருக்கிறது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!