நெகிழ்ச்சி... விபத்தில் படுகாயம் அடைந்தவரை காப்பாற்றிய அமைச்சர்!
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அறிவுரார் வீதியை சேர்ந்த ரமேஷ் (54), செல்போன் ரீசார்ஜ் கடை நடத்தி வருகிறார். வேலை முடித்து இரவு 11 மணியளவில் வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் சென்றபோது, அண்ணாசாலையில் ஸ்டேட் வங்கி அருகே குறுக்கே வந்த நாயை மோதி விபத்து ஏற்பட்டது. இதில் அவர் தலையில் பலத்த காயம் அடைந்து ரோட்டில் மயங்கி கிடந்தார்.
அப்போது அந்த இடத்தில் இருந்த கூட்டுறவு துறை அமைச்சர் பெரியகருப்பன் உடனே காரை நிறுத்தி ரமேஷுக்கு உதவி செய்தார். அவர் ஆம்புலன்ஸை அழைத்து ரமேஷை அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுப்பினார்.
விபத்து இடத்தில் சிதறிக்கிடந்த ரமேஷின் பையை கண்ட இளைஞர்கள், ரோந்து பணியில் இருந்த எஸ்ஐ சரவணன் மற்றும் காவலர் தினேஷிடம் ஒப்படைத்தனர். பையில் இருந்த ரூ.2.5 லட்சம் பணத்தை போலீசார் ரமேஷின் மனைவி ஜெயந்தியிடம் திருப்பி ஒப்படைத்தனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!