இன்று உலக அழகிப் போட்டி ஐதராபாத்தில் தொடக்கம்... 140 நாடுகளைச் சேர்ந்த அழகிகள் பங்கேற்பு!
May 10, 2025, 06:52 IST
இன்றுமே 10ம் தேதி ஐதராபாத்தில் 72 வது உலக அழகி போட்டி நடைபெற உள்ளது. இந்த போட்டியில் 140 நாடுகளைச் சேர்ந்த அழகிகள் கலந்து கொள்கின்றனர்.
ஐதராபாத், இந்த ஆண்டுக்கான 'மிஸ் வேர்ல்ட்' உலக அழகிப் போட்டி இந்தியாவின் தெலுங்கானாவில் உள்ள ஐதராபாத்தில் இன்று மே 10ம் தேதி தொடங்கி, மே 31ம் தேதி வரை நடைபெறவுள்ளது.
இந்த அழகிப் போட்டியில் 140 நாடுகளைச் சேர்ந்த அழகிகளும், உலகம் முழுவதிலும் இருந்து பத்திரிகையாளர்கள் மற்றும் பிற பிரபலங்களும் கலந்து கொள்கின்றனர்.
இதன் பிரம்மாண்டமான இறுதிப் போட்டி மே 31 அன்று ஹைடெக்ஸ் நகரில் நடைபெற உள்ளது. இதற்கு முன்னதாகப் பல நிகழ்ச்சிகளுக்கும் திட்டமிடப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!