undefined

அமேசான்  மீது ஏவுகணை தாக்குதல்… வங்கி சேவைகள் முடக்கம்!

 

மத்திய கிழக்கில் நீடிக்கும் போர் பதற்றம் உலகளவில் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது. ஈரான் மீது அமெரிக்கா–இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து வளைகுடா பகுதிகளில் பதிலடி தாக்குதல்கள் நடந்ததாக தகவல்கள் வெளியாகின. இதில் அலி அயத்துல்லா கமேனி உள்ளிட்ட பலர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இதன் பின்னணியில் ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட பகுதிகளில் தாக்குதல்கள் தீவிரமடைந்தன.

இந்த தாக்குதலில் அமேசான் வலை சேவைகளின் தரவு மையங்கள் கடுமையாக சேதமடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. அமீரகத்தில் உள்ள இரண்டு மையங்களும், பஹ்ரைன் நாட்டில் உள்ள ஒரு மையமும் டிரோன் தாக்குதலால் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் வங்கி மற்றும் பல டிஜிட்டல் சேவைகள் செயலிழந்தன. மக்கள் பணப் பரிவர்த்தனைகளில் சிக்கல் சந்தித்தனர்.

கரீம் டாக்ஸி, அலான், ஹப்-பே போன்ற செயலிகள் பாதிக்கப்பட்டன. வங்கி சேவை செயலிகளும் தடைபட்டதால் பொதுமக்கள் கடும் அவதியடைந்தனர். நிலைமையை சரிசெய்ய தொழில்நுட்ப குழுக்கள் அவசர நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடரும் போர் சூழ்நிலை டிஜிட்டல் துறையையும் பாதிக்க தொடங்கியுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!