சுனிதா வில்லியம்ஸ்க்கு சட்டப்பேரவையில் பாராட்டுக்களை தெரிவித்த முதல்வர் ஸ்டாலின் !
சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து சுனிதா வில்லியம்ஸ் பத்திரமாக பூமிக்கு திரும்பியுள்ளார். இதற்கு தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். 2024 ஜூன் மாதம் 5ம் தேதி ஸ்டார்லைனர் விண்கலம் மூலம் சர்வதேச விண்வெளி மையத்திற்கு ஆய்வு பணிகளுக்காக சுனிதா வில்லியம்ஸ் மற்றும் அமெரிக்க விண்வெளி வீரர் புட்ச் வில்மோர் இருவரும் விண்வெளிக்கு சென்றனர்.
8 நாட்கள் விண்வெளி பயணமாக சென்ற அவர்கள் தொழில்நுட்ப பாதிப்பு ஏற்பட்டதன் காரணமாக சுமார் 9 மாதங்கள் அங்கேயே இருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. பல்வேறு கட்டமுயற்சிகளுக்கு பிறகு ஃபால்கான் ராக்கெட் மூலம் க்ரூ டிராகன் விண்கலம் மூலம் இன்று அதிகாலை 3.30 மணிக்கு அமெரிக்கா புளோரிடா கடலில் தரையிறங்கினார்.
விண்வெளி மையத்திலிருந்து பத்திரமாக பூமி திரும்பிய சுனிதா வில்லியம்ஸ் மற்றும் குழுவினருக்கு பலரும் தங்கள் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். அமெரிக்காவில் மட்டுமல்லாது, இந்தியாவிலும் சுனிதா வில்லியம்சுக்கு வாழ்த்துக்களும், பாராட்டுக்களும் குவிந்து வருகின்றன.
விண்வெளி மையத்தில் தங்கி இருந்து தங்கள் பணிகளை இவர்கள் தொடர்ந்து செய்து வந்துள்ளனர். பின்னர் ஃபால்கான் ராக்கெட் மூலம் டிராகன் விண்கலம் மூலம் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் உட்பட மேலும் 2 விண்வெளி வீரர்களுடன் புளோரிடா கடலில் தரை இறங்கியுள்ளனர். அவர்கள் பத்திரமாக பூமிக்கு திரும்பியது அனைவரும் மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த தருணத்தில் சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு திரும்ப உதவிய அனைத்து நபர்களுக்கும் பாராட்டு மற்றும் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன் என முதல்வர் ஸ்டாலின் பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!