undefined

பழைய கைப்பேசிகளுக்கு செக்...  கோடிக்கணக்கான பயனர்களுக்கு பெரிய அபாயம்!

 

கோடிக்கணக்கான ஆண்ட்ராய்டு கைப்பேசி பயனர்கள் மீது தீங்கிழைக்கும் இணையத் தாக்குதல்கள் நடக்கும் அபாயம் இருப்பதாக கூகுள் நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. உலகம் முழுவதும் பலர் இன்னும் பழைய பதிப்பில் இயங்கும் கைப்பேசிகளை பயன்படுத்தி வருவதால் அவர்களின் தகவல்கள் திருடப்படும் ஆபத்து அதிகரித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

கூகுள் வெளியிட்ட தகவலின்படி, ஆண்ட்ராய்டு 13 மற்றும் அதற்குப் பிந்தைய புதிய பதிப்புகளை பயன்படுத்துபவர்கள் சுமார் 58 சதவீதம் மட்டுமே உள்ளனர். இதனால் சுமார் 40 சதவீதம் பயனர்கள் பழைய பதிப்பில் இருப்பதால் பாதுகாப்பு குறைபாடுகளுக்கு உள்ளாகின்றனர். குறிப்பாக ஆண்ட்ராய்டு 12 போன்ற பழைய பதிப்புகளை இன்னும் பலர் பயன்படுத்தி வருவது கவலை அளிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையை தவிர்க்க பயனர்கள் தங்களின் கைப்பேசிகளை உடனடியாக புதிய பதிப்புகளுக்கு மேம்படுத்த வேண்டும் என்று கூகுள் அறிவுறுத்தியுள்ளது. சில பழைய சாதனங்களுக்கு புதிய பாதுகாப்பு புதுப்பிப்புகள் கிடைக்காததால் தேவையானால் புதிய கைப்பேசி வாங்குவதையும் பரிசீலிக்க வேண்டும் என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!