undefined

மறுபடியும் முதல்ல இருந்தா... டிசம்பர் 16, 17 சென்னையில்  மழை… ! 

 
 

சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் டிசம்பர் 16, 17 தேதிகளில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இதனை தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். வடகிழக்குப் பருவமழை தற்போது கிட்டத்தட்ட முடிவுக்கு வரும் நிலையில் உள்ளது.

சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் இந்த பருவமழை இயல்பை விட குறைவாக பதிவாகியுள்ளதாக அவர் கூறினார். பூண்டி, புழல் ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளன. செம்பரம்பாக்கம் ஏரியும் விரைவில் நிரம்பும் நிலை உள்ளது. டிட்வா புயல் காரணமாக பெய்த கனமழையால் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது.

இதனால் வரவுள்ள கோடைக்காலத்தில் சென்னையில் நீர் பற்றாக்குறை இருக்காது என நம்பிக்கை தெரிவித்தார். இன்று மற்றும் நாளை டெல்டா மாவட்டங்கள், தூத்துக்குடி, ராமேஸ்வரம், பாம்பன் பகுதிகளில் லேசான மழை பெய்யலாம். டிசம்பர் இறுதியில் புயல் சின்னம் உருவாக வாய்ப்புள்ளதாக தனியார் வானிலை ஆய்வாளர்கள் கூறுவது குறிப்பிடத்தக்கது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!