ஜென் Z இளைஞர்களை ஈர்க்கும் ‘பஜன் கிளப்பிங்’ ... பிரதமர் மோடி பாராட்டு... வைரல் வீடியோ!
மாதாந்திர வானொலி நிகழ்ச்சியான ‘மன் கி பாத்’ உரையில் பேசிய மோடி, இந்த இயக்கம் ஆன்மீகத்தின் தூய்மையை காக்கும் அதே நேரத்தில் நவீனத்துவத்தையும் இணைக்கிறது என்றார். பாரம்பரியத்தை விட்டு விலகாமல், புதிய தலைமுறை தங்களுக்கே உரிய முறையில் பக்தியை வெளிப்படுத்துவது மகிழ்ச்சியளிப்பதாக தெரிவித்தார்.பஜனைகள் மற்றும் கீர்த்தனைகள் நூற்றாண்டுகளாக இந்திய கலாச்சாரத்தின் ஆன்மீக அடித்தளமாக இருந்து வருவதாகவும் மோடி நினைவூட்டினார். கோயில்கள், கதைகள் மற்றும் தலைமுறை வழியாக பரம்பரையாக வந்த இந்த பக்தி மரபு, ஒவ்வொரு காலத்திலும் புதிய வடிவம் எடுத்து மக்களை ஒன்றிணைத்து வருவதாகவும் அவர் கூறினார்.
பஜனைகளின் கண்ணியமும் தூய்மையும் எந்த இடத்திலும் குறையவில்லை என்றும் அவர் கூறினார். வார்த்தைகளின் புனிதத்தன்மையோ, உணர்வின் ஆழமோ எங்கும் சமரசம் செய்யப்படவில்லை என்றார். பக்தியை நவீனத்துடன் இணைக்கும் இந்த முயற்சி மகிழ்ச்சியளிப்பதாக மோடி தெரிவித்தார்.டெல்லி, பெங்களூரு, கொல்கத்தா உள்ளிட்ட நகரங்களில் பிரபலமாகி, அமெரிக்காவிற்கும் பரவி வரும் பஜன் கிளப்பிங், இளைஞர்களிடையே வேகமாக வரவேற்பு பெறுகிறது. நேரடி இசை, ஒளி அலங்காரம், உற்சாகமான சூழல் ஆகியவற்றுடன் பாரம்பரிய பஜனைகள் புதிய வடிவில் வழங்கப்படுகின்றன. இதன் மூலம் ஆன்மீகமும் நவீன வாழ்க்கையும் ஒன்றாக பயணிக்க முடியும் என்பதை இந்தப் போக்கு நிரூபித்து வருகிறது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!