undefined

 ஆயிரம் ஆண்டுகளை கடந்தும் கம்பீரமாக நிற்கும் சோமநாதர் கோவிலில் பிரதமர்  மோடி வழிபாடு!

 
 

குஜராத்தின் பிரபாச பட்டினம் கடற்கரையில் அமைந்துள்ள சோமநாதர் கோயில், பல தாக்குதல்களையும் கடந்து இன்று கம்பீரமாக நிற்கிறது. கஜினி முகமது உள்ளிட்ட ஆட்சியாளர்களின் தாக்குதல்களுக்கு பிறகும், சுதந்திர இந்தியாவில் மீண்டும் எழுப்பப்பட்ட இந்த கோயில், ஆயிரம் ஆண்டுகால வரலாற்றை நினைவூட்டுகிறது. அந்த நினைவாக தொடங்கப்பட்ட சோமநாதர் சுயமரியாதை பெருவிழா நாளையுடன் நிறைவடைகிறது.

இந்த விழாவையொட்டி பிரதமர் நரேந்திர மோடி நேற்று மாலை சோமநாதர் கோயிலுக்கு சென்று ஓம்கார மந்திர பாராயணத்தில் பங்கேற்று வழிபாடு செய்தார். பின்னர் நடைபெற்ற ட்ரோன் நிகழ்ச்சியையும் பார்வையிட்டார். இன்று காலை வீர யாத்திரையில் கலந்து கொண்டு, கோயிலில் சிறப்பு வழிபாடு நடத்துகிறார். தொடர்ந்து சுயமரியாதை பெருவிழா நிகழ்ச்சியில் உரையாற்ற உள்ளார்.

இதனைத் தொடர்ந்து ராஜ்கோட்டில் நடைபெறும் குஜராத் மண்டல மாநாட்டில் பங்கேற்கும் மோடி, வர்த்தக கண்காட்சி மற்றும் பல்கலைக்கழக நிகழ்ச்சிகளையும் தொடங்கி வைக்கிறார். மாலையில் அகமதாபாத்தில் மெட்ரோ திட்ட பணிகளை தொடங்கி வைக்க உள்ளார். நாளை ஜெர்மனி பிரதமரை சந்தித்து, சபர்மதி ஆசிரமம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!