நிர்மலா சீதாராமன் 9வது முறையாக பட்ஜெட் தாக்கல்... மோடி பாராட்டு!
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் நேற்று குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவின் உரையுடன் ஆரம்பமானது. இன்று பிரதமர் மோடி செய்தியாளர்களிடம் பேட்டி அளித்து, “இந்தியாவின் வளர்ச்சியை மனதில் வைத்து எம்பிக்கள் செயல்பட வேண்டும். நாட்டின் வளர்ச்சிக்கு எம்பிக்கள் பாடுபட வேண்டும்” என்று கூறினார்.
அவர் மேலும் சொன்னார், “மக்களின் மேம்பாட்டிற்கான தளமாக நாடாளுமன்றம் இருக்க வேண்டும். குடியரசுத் தலைவரின் அறிவுரைக்கு உறுப்பினர்கள் முக்கியத்துவம் அளிக்க வேண்டும். ஆக்கப்பூர்வமான விவாதத்திற்கு மத்திய அரசு எப்போதும் தயார்”. 140 கோடி மக்களின் தன்னம்பிக்கையை பிரதிபலிக்கும் வகையில் குடியரசுத் தலைவரின் உரை அமைந்திருந்தது.
பிரதமர் மோடி ஐரோப்பிய யூனியன் உடனான புதிய தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை முக்கியமாக குறிப்பிட்டு, “இந்த ஒப்பந்தம் உற்பத்தித் துறையின் வளர்ச்சிக்கு, இளைஞர்கள், விவசாயிகள், மீனவர்களுக்கு நன்மை தரும். நீண்டகால பிரச்சனையை நீண்டகால தீர்வாக மாற்றும். பல்வேறு சீர்திருத்தங்கள் மூலம் நாட்டின் வளர்ச்சிக்கு வழி வகுக்கின்றோம்” என்று கூறினார்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!