நாளை மறுநாள் கூட்டணி எம்.பி.க்களுக்கு மோடி விருந்து!
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த 1ம் தேதி தொடங்கியது. வரும் 19ம் தேதி வரை கூட்டத்தொடர் நடைபெற உள்ளது. இதில் பல முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி எம்.பி.க்களுக்கு பிரதமர் மோடி விருந்து அளிக்க உள்ளார். நாளை மறுதினம், அதாவது 11ம் தேதி இந்த விருந்து நடைபெறுகிறது. இதில் பங்கேற்குமாறு அதிமுக எம்.பி.க்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
பல மாநிலங்களில் விரைவில் தேர்தல் நடைபெற உள்ள சூழலில் இந்த விருந்து அரசியல் முக்கியத்துவம் பெற்றதாக பார்க்கப்படுகிறது. தேசிய ஜனநாயக கூட்டணி எம்.பி.க்கள் ஒரே மேடையில் கூடுவது கவனம் ஈர்த்துள்ளது. அரசியல் வட்டாரங்களில் இதுபற்றி பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!