சுதேசி கொள்கையை வலியுறுத்தவர் மகாத்மா காந்தி... ராஜ்காட்டில் அஞ்சலி செலுத்தி மோடி பதிவு!
மகாத்மா காந்தியின் 78-வது நினைவு தினத்தை முன்னிட்டு இன்று நாடு முழுவதும் தியாகிகள் தினம் அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி தில்லி ராஜ்காட்டில் உள்ள காந்தி நினைவிடத்தில் காலை முதலே தலைவர்கள் திரண்டு வருகின்றனர். மலர்களால் அலங்கரிக்கப்பட்ட நினைவிடத்தில் அமைதி சூழ்ந்தது.
பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை ராஜ்காட் சென்று மகாத்மா காந்தியின் சமாதியில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அவருடன் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவும் மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்வில் மத்திய அமைச்சர்கள் மற்றும் முக்கிய தலைவர்களும் பங்கேற்றனர்.
இதுகுறித்து பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், “தேசத்தந்தை மகாத்மா காந்திக்கு எனது வணக்கங்கள். அவர் சுதேசி கொள்கைக்கு அளித்த முக்கியத்துவமே தற்சார்பு இந்தியாவின் அடித்தளம். அவரது வாழ்க்கையும் சிந்தனைகளும் நாட்டுமக்களை கடமை உணர்வுடன் நடக்க எப்போதும் ஊக்குவிக்கும்” என்று தெரிவித்துள்ளார்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!