மோடி தமிழில் ட்வீட்!! உச்சகட்ட கெடுபிடிகளுடன் திணறும் தலைநகர்!!
இன்று பிற்பகல் பிரதமர் மோடியின் சென்னை வருகையையொட்டி தலைநகர் முழுவதும் உச்சகட்ட பரபரப்பில் பாதுகாப்பு ஏற்பாட்டுடன் தயாராக உள்ளன. சென்னையில் மட்டும் 22000 போலீசார் பிரதமரின் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பிரதமரின் வருகையையொட்டி சட்டம், ஒழுங்கு, குற்றப்பிரிவு, போக்குவரத்து மற்றும் சிறப்பு பிரிவு காவல் அதிகாரிகள், ஆளிநர்கள், ஆயுதப்படை, கமாண்டோ, தமிழ்நாடு சிறப்பு காவல் படை காவல் ஆளிநர்கள் என அனைவரும் சேர்ந்து 5 அடுக்கு பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதேபோல், பிரதமர் மோடி வருகை காரணமாக சென்னையில் உள்ள பல்வேறு இடங்களில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.இது குறித்து பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், சென்னையில், விமான நிலையத்தின் புதிய முனையக் கட்டிடம் திறந்து வைக்கப்பட உள்ளது. தொடர்ந்து, சென்னை – கோயம்புத்தூர் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சேவையை துவக்கி வைத்து, பிறகு ஶ்ரீராமகிருஷ்ண மடத்தின் 125வது ஆண்டு நிறுவன விழாவிலும் கலந்து கொள்ள உள்ளேன்.’ என தமிழிலில் பதிவிட்டுள்ளார். இந்த பதிவு பெரும் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி பெரும் வைரலாகி வருகிறது.
பிரதமர் மோடி வருகை தரும் போது #GoBackModi என்ற ஹேஷ்டேக் எப்போதும் எதிர்க்கட்சிகள் மூலம் டிரெண்ட் செய்யப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது. ஆனால், இந்த முறை #Vanakkam_Modi என்ற ஹேஷ்டேக் டிரெண்டிங்கில் உள்ளது. எதிர்க்கட்சிகள் முயற்சித்து #GoBackModi என்ற ஹேஷ்டேக்கை டாப் இடத்தில் கொண்டு வர முயற்சிக்கின்றன. இருந்தாலும் வணக்கம்மோடி என்ற ஹேஷ்டேக் முதலிடம் பிடித்து விடுகிறது. இது பாஜகவின் முயற்சி என்கின்றனர் நெட்டிசன்கள்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!