மார்ச் 1-க்கு மாற்றம்… மதுரையில் மோடி பொதுக்கூட்டம் திருவிழா போல நடக்கும் என பாஜக அறிவிப்பு!
மதுரையில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்க இருந்த பொதுக்கூட்டம் மார்ச் 1 ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளதாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். திருநெல்வேலியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்த கூட்டத்தை திருவிழா போல் நடத்த திட்டமிட்டுள்ளதாக கூறினார். கூட்டத்தில் கூட்டணி கட்சித் தலைவர்களும் பங்கேற்க உள்ளனர் எனவும் தெரிவித்தார்.
தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு நிலைமை சரியில்லை என்று குற்றம்சாட்டிய அவர், ஆளும் திமுக அரசு பொய்யான வாக்குறுதிகளை அளித்து ஆட்சிக்கு வந்ததாக விமர்சித்தார். பொங்கல் பரிசாக ரூ.3 ஆயிரம் இந்த ஆண்டு வழங்கப்பட்டாலும், கடந்த 2 ஆண்டுகளாக வழங்கப்படவில்லை என்றும் கூறினார். மேலும், தேர்தலை முன்னிட்டு ஒவ்வொரு தொகுதியிலும் பணம் வழங்கும் திட்டம் உள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
மத்திய பட்ஜெட்டில் ரூ.40 ஆயிரம் கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார். மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணி இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாக கூறிய அவர், விரைவில் நேரில் சென்று ஆய்வு செய்ய உள்ளதாகவும் தெரிவித்தார். நடிகர் விஜய் தொடர்பான வரி அபராத விவகாரத்திலும் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!