எரிபொருள் தட்டுப்பாடு வருமா? இன்று பிற்பகல் 2 மணிக்கு மேற்கு ஆசியப் போர் குறித்து பாராளுமன்றத்தில் பிரதமர் மோடி உரை!
மேற்கு ஆசியாவில் (ஈரான் - இஸ்ரேல் - அமெரிக்கா) போர் பதற்றம் முன்னெப்போதும் இல்லாத வகையில் அதிகரித்து வரும் நிலையில், இந்தியாவின் நிலைப்பாடு மற்றும் அதன் தாக்கம் குறித்துப் பிரதமர் நரேந்திர மோடி இன்று (திங்கட்கிழமை) பிற்பகல் 2 மணிக்கு மக்களவையில் முக்கிய உரையாற்றுகிறார். இந்தப் போர்ச் சூழலால் சர்வதேச அளவில் எரிசக்தி மற்றும் வர்த்தக வழித்தடங்களில் ஏற்பட்டுள்ள தடைகள், உலகப் பொருளாதாரத்தைப் பாதித்து வரும் நிலையில், இந்தியா எடுத்துள்ள ராஜதந்திர நடவடிக்கைகள் குறித்துப் பிரதமர் விரிவாக விளக்கமளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, போர்ப் பகுதியில் தங்கியுள்ள இந்தியக் குடிமக்களின் பாதுகாப்பு மற்றும் நாட்டின் பொருளாதார நிலைத்தன்மை குறித்து அவர் உரையாற்ற உள்ளார்.
முக்கியமாக, கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகச் சங்கிலியில் தடைகள் ஏற்படாமல் இருக்க மாற்று வழிகளை ஆராயவும், அத்தியாவசியப் பொருட்களின் விலை உயராமல் தடுக்கவும் அரசு திட்டமிட்டுள்ளது. ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் நிலவும் பதற்றத்தால் கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்தியக் கடற்படையின் பாதுகாப்பு மற்றும் வர்த்தகப் பாதைகளின் பாதுகாப்பு குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. "மேற்கு ஆசிய நிலைமை நமக்கு மிகுந்த கவலையளிக்கும் விஷயம்" என ஏற்கனவே குறிப்பிட்டிருந்த பிரதமர், இன்றைய உரையில் இந்தியாவின் அடுத்தகட்டத் திட்டங்களை அதிகாரப்பூர்வமாக அறிவிக்க உள்ளார்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!