பிரபல நடிகர் மோகன்லாலின் தாய் சாந்தகுமாரி காலமானார்!
மலையாள சினிமாவின் சூப்பர் ஸ்டார் மோகன்லாலின் அம்மா, சாந்தகுமாரி, இன்று 90 வயதில் மறைவு அடைந்தார். இந்த துயரச் செய்தி திரையுலகினரிலும், மோகன்லால் ரசிகர்களிடையிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில ஆண்டுகளாக உடல்நலக் குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த சாந்தகுமாரி, ஸ்ட்ரோக் காரணமாக மேலும் பாதிக்கப்பட்ட நிலையில் குடும்பத்தினரின் முழு கவனத்தில் இருந்தார்.
சாந்தகுமாரி, எளிமையான குடும்ப வாழ்க்கையை வாழ்ந்தவர். திருவனந்தபுரத்திலிருந்து கொச்சிக்கு மாற்றப்பட்டு மகனின் அருகிலேயே வாழ்ந்த அவர், அமைதியான மற்றும் ஒழுங்கான வாழ்க்கையால் அனைவரிடமும் மரியாதையை பெற்றிருந்தார். மோகன்லால் பல பேட்டிகளில் தாயின் அன்பு, ஆசீர்வாதம் மற்றும் ஒழுக்கத்தை தனது நடிப்பு பயணத்தின் அடித்தளமாக விளக்கி வருகிறார். அன்னையர் தினம் போன்ற சிறப்பு நிகழ்வுகளில் அவர் தாயுடன் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களின் மனத்தை நெகிழச் செய்தார்.
மோகன்லாலின் மனைவி சுசித்ரா, பேரன் பிரணவ், பேத்தி விஸ்மயா மற்றும் குடும்பத்தினர் உடன் இருந்த சாந்தகுமாரி, தனது இறுதிச் சடங்குகள் டிசம்பர் 31, 2025 அன்று நடைபெறும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. திரையுலக நண்பர்கள், பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் சமூக வலைதளங்கள் வழியாக ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!