மோகித் சர்மா அனைத்து வகையான கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு!
இந்தியாவின் வேகப்பந்துவீச்சாளர் மோகித் சர்மா அனைத்து வடிவங்களிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இந்திய அணிக்காக 26 ஒருநாள் போட்டிகளில் 31 விக்கெட்டும், 8 டி20 போட்டிகளில் 6 விக்கெட்டும் எடுத்த அவர், ஐபிஎல் தொடரில் 120 ஆட்டங்களில் விளையாடி 134 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காகவும் அவர் நீண்ட காலம் பந்து வீசியது குறிப்பிடத்தக்கது.
இன்ஸ்டாகிராமில் உணர்ச்சி வசப்பட்ட பதிவை வெளியிட்ட மோகித், “நிறைந்த இதயத்துடன் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுகிறேன். அரியானாவை பிரதிநிதித்துவப்படுத்தியது முதல் இந்திய ஜெர்சியை அணிந்த தருணம் வரை, இந்த பயணம் எனக்கான ஒரு ஆசீர்வாதம்,” என கூறினார். தனது கிரிக்கெட் பயணத்தில் துணைநின்ற அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.
உறுதியான திறமையால் இந்தியா மற்றும் ஐபிஎல்லில் தனக்கான இடத்தை உருவாக்கிய மோகித் சர்மா, வீரராக இருந்த காலத்தை பெருமையுடன் முடித்து வைக்கிறார்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!