இறுதிச் சடங்கு செலவுக்குப் பணம்... உருக்கமாக கடிதம் எழுதி வைத்துவிட்டு முன்னாள் அரசு அதிகாரி ரயிலில் பாய்ந்து தற்கொலை
திருவண்ணாமலை மாவட்டத்தில் புள்ளியியல் துறை ஆய்வாளராகப் பணிபுரிந்து ஓய்வு பெற்ற மூத்த அரசு அதிகாரி ஒருவர், வயது முதிர்வு காரணமாகவும், ஆதரவற்ற நிலையாலும் வாணியம்பாடி இரயில் நிலையத்தில் இரயிலின் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்கொலைக்கு முன், அவர் தனது இறுதிச் சடங்கிற்கான செலவுக்குப் பணம் வைத்திருந்ததுடன், காவல்துறைக்கு உருக்கமான கடிதம் ஒன்றையும் எழுதியிருந்தார்.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி இரயில் நிலையத்திற்கு நேற்று முன்தினம் காலை வந்த சுமார் 75 வயது மதிக்கத்தக்க முதியவர், சென்னையில் இருந்து திருவனந்தபுரம் செல்லும் சபரி எக்ஸ்பிரஸ் இரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.
விசாரணையில் அவர், வாணியம்பாடி அடுத்த செட்டியப்பனூரைச் சேர்ந்த சந்திரசேகரன் (76) என்பதும், திருவண்ணாமலை மாவட்டத்தில் புள்ளியியல் துறையில் ஆய்வாளராகப் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர் என்பதும் தெரியவந்தது. அவருக்குத் திருமணம் ஆகாததால் தனியாக வசித்து வந்துள்ளார். சந்திரசேகரன் வீட்டில் போலீசார் ஆய்வு செய்தபோது, வாணியம்பாடி தாலுகா இன்ஸ்பெக்டருக்கு அவர் எழுதி வைத்திருந்த கடிதம் கைப்பற்றப்பட்டது.
கடிதத்தில், "திருமணம் ஆகாத நான் வயது முதிர்வு காரணமாகச் சிரமப்படுவதால் தற்கொலை முயற்சியில் ஈடுபடுகிறேன். எனது முடிவுக்கு நானே காரணம். வேறு யாரும் காரணம் இல்லை. என்னை பார்க்க உறவினர்கள் யாரும் வர மாட்டார்கள். நான் இறந்த பிறகு எனது உடலை உடற்கூறு ஆய்வு செய்து மருத்துவமனையில் இருந்து நேரடியாக இடுகாடு சென்று புதைத்து விடவும். அதற்கான செலவுக்கு ரூ. 25 ஆயிரம் வைத்துள்ளேன். தயவுசெய்து எனது விருப்பத்தை நிறைவேற்றும்படி கேட்டுக்கொள்கிறேன்" என்று உருக்கமாகக் குறிப்பிட்டிருந்தார்.
மேலும், அவர் வசித்து வந்த வீட்டை சர்ச்சுக்கு எழுதி வைத்திருப்பதாகவும், தனது பென்ஷன் புத்தகத்தை அலுவலகத்தில் ஒப்படைத்துவிட்டுப் பென்ஷனை ரத்து செய்யுமாறும் கேட்டுக்கொண்டுள்ளார். இறுதிச் சடங்கு செலவுக்காகத் தனது செல்போன் மூலம் பணம் எடுப்பதற்கான பாஸ்வேர்ட் எண்ணையும் அவர் எழுதி வைத்திருந்தார்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!