புதிய பாராளுமன்றத்தில் மழைக்கால கூட்டத்தொடர்... மத்திய அமைச்சர் தகவல்!
மே 29ம்தேதி புதிய பாராளுமன்றத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார். இந்நிலையில் பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் புதிய பாராளுமன்ற கட்டிடத்தில் நடத்த மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. தற்போது அதற்கான பணிகள் நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர், ஜூலை 20ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 11 வரை நடைபெறும் என மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி தெரிவித்துள்ளார். இந்நிலையில் மழைக்கால கூட்டத்தொடரில் மணிப்பூர் கலவரம், விலைவாசி உயர்வு, பொது சிவில் சட்டம் உட்பட பல பிரச்சனைகளை எழுப்ப, எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.
இது குறித்து மத்திய பாராளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி ட்விட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் 2023ம் ஆண்டுக்கான மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 20ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் மாதம் 11ம் தேதி வரை புதிய பாராளுமன்ற கட்டிடத்தில் நடைபெற உள்ளது.
இந்த கூட்டத்தொடரின் போது அலுவல் மற்றும் இதர விஷயங்கள் குறித்து விவாதங்கள் நடைபெறும். இந்த விவாதங்களுக்கு அனைத்து கட்சியினரும் பங்களிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
பொலிவான பிரகாசிக்கும் சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!