வைரல் வீடியோ... ஒரே வீட்டில் 300க்கும் மேற்பட்ட பூனைகள்… போலீசில் கம்ப்ளைண்ட் கொடுத்த அக்கம் பக்கத்தினர்!
மகாராஷ்டிரா மாநிலத்தில் புனேவில் ஹடப்சர் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர்கள் ரிந்து பரத்வாஜ் மற்றும் அவரது சகோதரி ரிது பரத்வாஜ். இவர்கள் அவர்களது வீட்டில் சுகாதாரமற்ற சூழலில் 300-க்கும் மேற்பட்ட பூனைகளை வளர்த்து வந்துள்ளனர். இதனால் அப்பகுதியில் தொடர் துர்நாற்றம் வீசத் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து அக்கம் பக்கத்தினர் 2024 ஆகஸ்ட் 15ம் தேதி போலீசில் புகார் அளித்தனர்.
பாதுகாப்பு மற்றும் விலங்குகளின் நலனை கருத்தில் கொண்டு, அதிகாரிகள் பூனைகளை அங்கிருந்து மீட்டுச் செல்ல தற்காலிக திட்டங்களை கூறினார். ஆனால் வீட்டு உரிமையாளர்கள், பூனைகளை தாங்களே வேறு இடத்திற்குப் பாதுகாப்பாக மாற்றுவதாக உறுதியளித்தனர். இதனால், அவர்களுக்கு சில நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டது. விலங்குகளின் பாதுகாப்பு மற்றும் சட்டப்படி உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்த, அதிகாரிகள் மீண்டும் கண்காணிப்பு நடத்த உள்ளதாக கூறினர்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!