4000க்கும் மேற்பட்ட மீனவர்கள் வேலைநிறுத்தம்!
தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டு வருவது வாடிக்கையாகி வருகிறது. அந்த வகையில் ராமேஸ்வரம் மீனவா்கள் விசைப்படகுகளை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. இதனையடுத்து மீனவர்களையும், அவா்களது படகுகளையும் விடுவிக்க மத்திய அரசு உடனடி நடவடிக்கை எடுக்கக் கோரி, ராமேசுவரம் மீனவா்கள் புதன்கிழமை ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
ராமேஸ்வரத்தில் துறைமுகத்தில் 560க்கும் மேற்பட்ட விசைப்படகுகளை நிறுத்தி 4000க்கும் மேற்பட்ட மீனவர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்தில் இருந்து மீன்பிடிக்க செல்லும் தமிழ்நாடு மீனவர்களை இலங்கை கடற்படையினர் தொடர்ந்து கைது செய்து வருகின்றனர். மேலும் படகுகளைப் பறிமுதல் செய்து எல்லை தாண்டி வந்து மீன் பிடித்ததாக மீனவர்கள் மீது வழக்குப் பதிந்து பல லட்சம் அபராதம் மற்றும் சிறைகளில் அடைத்து வருகின்றனா். இதனை கண்டித்து மீனவர்கள் தொடர் போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், ராமேஸ்வரம் மீனவர்கள் 3 பேருடன் ஒரு விசைப்படகை இலங்கை கடற்படையினர் செவ்வாய்க்கிழமை சிறைபிடித்தனர். இதில், படகு பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், மீனவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதனைகண்டித்து, புதன்கிழமை ராமேசுவரம் மீனவர்கள் ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.இதனால், துறைமுகத்தில் 560க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ளன. 4000க்கும் மேற்பட்ட மீனவர்கள் பங்கேற்றுள்ளனர்.
இலங்கை கடற்படையினரின் தொடர் கைது காரணமாக ராமேசுவரத்தில் மீன்பிடி தொழில் முழுமையாக முடங்கி விடும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், பல ஆயிரம் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இந்திய இலங்கை மீனவர்கள் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு கான மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவ சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். வேலைநிறுத்தப் போராட்டம் காரணமாக, மீன்பிடி இறங்குதளத்தில் பாதுகாப்பாக நிறுத்திவைக்கப்பட்டிருந்த விசைப் படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!