undefined

5.5 கோடி மக்கள் பாதிப்பு... அமெரிக்காவில் அதிதீவிர பனிப்புயலால் 27 மாகாணங்களுக்கு எச்சரிக்கை!

 

அமெரிக்காவில் கடுமையான பனிப்புயல் காரணமாக 5.5 கோடி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.  பொதுவாக அமெரிக்காவில் வருடந்தோறும் நவம்பர் மாதத்தின் துவக்கத்தில் இருந்து மார்ச் மாதம் வரையிலான குளிர்காலத்தில் பனிப்புயல்கள் வழக்கமானது தான் என்றாலும் இம்முறை ஏற்கனவே 2 பனிப்புயல்கள் தாக்கிய நிலையில், தற்போது உருவாகியுள்ள 3வது பனிப்புயல் அதிதீவிர நிலைக்கு மாறி அமெரிக்காவை அச்சுறுத்தி வருகிறது. இந்த புதிய பனிப்புயலால் மட்டும் 5.5 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொலராடோ மாகாணத்தின் ராக்கி மலைப்பகுதியில் ஒரு அடி உயரத்திற்கு பனி பெய்துள்ளது. கன்சாஸ் சிட்டியில் 10 செ.மீ. பனி சேகரமாகியுள்ளதோடு, செயின்ட் லூயிஸில் 7 செ.மீ. பனி பதிவாகியுள்ளது. பல இடங்களில் சாலைகள் முடங்கியுள்ளன, போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது, குறைந்த வெப்பநிலை காரணமாக மக்கள் வீடுகளிலேயே தங்கும்படி ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

மோண்டானா முதல் கிழக்கு கடற்கரையில் உள்ள மைனே வரையிலான 2,500 கி.மீ. நீளப் பகுதிக்குப் பரவியுள்ள 27 மாகாணங்களுக்கு வானிலை மையம் அதிதீவிர பனிப்புயல் எச்சரிக்கையை விடுத்துள்ளது. கடும் பனிப்பொழிவும், பனிக்காற்றும் அடுத்த சில நாட்களும் நீடிக்க வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!