முருங்கை சாறு, பாதாம் அல்வா... அதிபர் புதினுக்கு அளிக்கப்பட்ட விருந்தின் மெனு கார்டு வைரல்!
இந்தியா - ரஷ்யா உச்சி மாநாட்டில் பங்கேற்க இரண்டு நாள் அரசுமுறைப் பயணமாக இந்தியா வந்திருந்த ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுக்கு, ஜனாதிபதி திரௌபதி முர்மு அவர்கள் குடியரசுத் தலைவர் மாளிகையில் அளித்த இரவு விருந்தின் மெனு கார்டு தற்போதுச் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதில், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களின் பாரம்பரிய உணவுகள் இடம்பெற்று, புதினைக் கவர்ந்ததாகக் கூறப்படுகிறது.
நேற்று (வெள்ளிக்கிழமை) இரவு நடைபெற்ற இந்த விருந்தில், துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன், பிரதமர் மோடி, மத்திய மந்திரிகள், சசி தரூர் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் மற்றும் வெளியுறவுத்துறை உயர் அதிகாரிகள், ரஷ்யத் தூதுக்குழுவினர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
விருந்தில் தென்னிந்திய உணவான `முருங்கை இலை சாறு’ முதலிடம் பிடித்துள்ளது. அத்துடன், தென்னிந்திய ரசம், காஷ்மீரி வால்நட் கொண்டு செய்யப்பட்ட குச்சி டூன் செடின், பான்-கிரில் செய்யப்பட்ட கருப்பு பயறு கபாப்ஸான காலே சேன் கே ஷிகாம்பூரி, காரமான சட்னியுடன் கூடிய காய்கறி ஜோல் மோமோ போன்ற காஷ்மீர் முதல் தென்னிந்தியா வரையிலான உணவுகள் முதலில் பரிமாறப்பட்டன.
இனிப்புப் பட்டியலில் பாதாம் அல்வா, கேசர்-பிஸ்தா குல்ஃபி, புதிய பழங்கள், குர் சந்தேஷ், முறுக்கு போன்ற பாரம்பரிய உணவுகளுடன், பல்வேறு ஊறுகாய்கள் மற்றும் சாலடுகள் இடம்பெற்றன. விருந்தை முடிக்கும் வகையில், மாதுளை, ஆரஞ்சு, கேரட் மற்றும் இஞ்சி சாறுகள் அடங்கிய பழச்சாறுகளும் பரிமாறப்பட்டன.
இந்த விருந்து மெனு கார்டில் இந்தியப் பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் உணவுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருந்தது, இது இணையத்தில் கவனம் பெற்றுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!