undefined

இனி பள்ளிகளில்   காலை, மதியம்,  மாலை நேர ‘நியூட்ரிஷன் ஸ்நாக்ஸ்’ ! 

 

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு போதிய ஊட்டச்சத்து கிடைக்க வேண்டும் என்ற நோக்கில், மதிய சத்துணவு திட்டம் மற்றும் காலை உணவு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் பயன் அடைந்து வருகின்றனர்.

காலை உணவுத் திட்டத்தின் கீழ், ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு வெண் பொங்கல், ரவா கிச்சடி, சேமியா கிச்சடி, இட்லி போன்ற உணவுகள் வழங்கப்படுகின்றன. அதேபோல், சத்துணவுத் திட்டத்தில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு மதிய வேளையில் சாதம், சாம்பார், கீரை, காய்கறிகள், முட்டை உள்ளிட்ட சத்தான உணவுகள் வழங்கப்படுகின்றன.

இந்த நிலையில், தினசரி மாலை நேரத்திலும் மாணவர்களுக்கு கூடுதல் ஊட்டச்சத்து வழங்க வேண்டும் என்ற நோக்கில் புதிய பரிந்துரை முன்வைக்கப்பட்டுள்ளது. அதன்படி, வாழைப்பழம், ஆப்பிள், சிறுதானிய வகைகள் அடங்கிய ‘நியூட்ரிஷன் ஸ்நாக்ஸ்’ மாலை சிற்றுண்டியாக வழங்க வேண்டும் என பொதுச் சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்து துறை, சமூக நலத் துறைக்கு பரிந்துரை செய்துள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!