கணவர் இறந்த சோகம்... 2 வயது குழந்தையை தூக்கிலிட்டு தாயும் தற்கொலை!
தெலுங்கானாவின் மேடக் மாவட்டத்தில் கூலித்தொழிலாளி பிரவீன் கவுடு மரணித்த பின்னர், அவரது மனைவி அகிலா மாமியார் வீட்டில் குழந்தையுடன் தங்கி வந்தார். கணவரை இழந்த சோகத்தில் இருந்த அகிலாவை மறுமணம் செய்யுமாறு குடும்பத்தினர் கூறியதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால் அதற்கு அவர் சம்மதிக்காத நிலையில் மன அழுத்தத்தில் அவஸ்தைப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இந்த சூழ்நிலையில், அகிலா தன் இரண்டு வயது குழந்தையை தூக்கில் போட்டுவிட்டு, பின்னர் தானும் தூக்கிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குடும்ப தகராறு மற்றும் மன அழுத்தமே காரணம் என ஆரம்பக்கட்ட தகவல்கள் கூறுகின்றன.
இந்த சம்பவத்துக்கு தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தாய்–குழந்தை உயிரிழப்பால் கிராமம் முழுவதும் துயர சூழ்நிலை நிலவுகிறது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!