undefined

மாஸ்...   வாகன ஓட்டிகளின் உயிரைக் காக்க  இரும்பு கம்பி மோட்டார் சைக்கிள்கள்... வைரல் வீடியோ! 

 
 

உலகக்கோப்பை கிரிக்கெட்டில் இந்தியா–பாகிஸ்தான் போட்டி தொடர்பான செய்திகள் சமூக வலைதளங்களில் பேசப்பட்டு வரும் நிலையில், லாகூர் நகர சாலைகளில் காணப்படும் ஒரு விசித்திரமான காட்சி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. அங்குள்ள பல மோட்டார் சைக்கிள்களின் முன்புறத்தில் இரும்பு கம்பிகள் செங்குத்தாக பொருத்தப்பட்டுள்ளன. குறுகிய சந்துகள் முதல் முக்கிய சாலைகள் வரை செல்லும் பெரும்பாலான இருசக்கர வாகனங்களில் இந்த அமைப்பு காணப்படுகிறது.

முதலில் இது தற்காப்பு அல்லது அரசியல் காரணங்களுக்காக செய்யப்பட்டதாக மக்கள் கிண்டலாக பேசினர். ஆனால் இதற்குப் பின்னால் முக்கியமான பாதுகாப்பு காரணம் இருப்பது தெரியவந்துள்ளது. பாகிஸ்தானில் காற்றாடி விடுவது மிகவும் பிரபலமான பொழுதுபோக்காகும். காற்றாடி விடுவதற்குப் பயன்படுத்தப்படும் ‘சைனீஸ் மாஞ்சா’ நூல்கள் மற்றும் கண்ணாடி துகள்கள் பூசப்பட்ட நூல்கள் மிகவும் ஆபத்தானவை என கூறப்படுகிறது.

உயரத்தில் பறக்கும் காற்றாடியின் நூல் அறுந்து சாலையில் தொங்கும்போது, வேகமாக வரும் வாகன ஓட்டிகளின் கழுத்து மற்றும் முகத்தை அறுக்கும் விபத்துகள் ஏற்படுகின்றன. இதுபோன்ற விபத்துகளைத் தவிர்க்க லாகூர் மக்கள் வாகனங்களில் இரும்பு கம்பிகளை பொருத்தி வருகின்றனர். இந்த கம்பிகள் நூலை வழிமறித்து பாதுகாப்பை வழங்குகின்றன. இந்தியாவிலும் குறிப்பாக ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் இதுபோன்ற பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவது குறிப்பிடத்தக்கது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!