undefined

வாகன ஓட்டிகளே உஷார்... திடீரென தீப்பிடித்து எரிந்த பைக்.... பெரும் பரபரப்பு!
 

 

தமிழகத்தில் கடலூர் மாவட்டம் ராமநத்தத்தை அடுத்துள்ள பெரங்கியம் கிராமத்தில் வசித்து வருபவர்  கர்ணன் மகன் லிங்கேஷ் . இவர்  நேற்று இரவு இவர் ராமநத்தம் பகுதியில் உள்ள ஒரு பேன்சி ஸ்டோர் கடையின் முன்பு பைக்கை நிறுத்திவிட்டு கடையின் உள்ளே சென்று பொருட்களை வாங்கிக்கொண்டு மீண்டும் பைக்கை எடுப்பதற்காக வந்திருந்தார். 

 பைக்கில் உட்கார்ந்து ஸ்டார்ட் செய்யும்போது திடீரென பைக்கில் இருந்து தீப்பொறியுடன் புகை கிளம்பியது.  இதனால் பதற்றமடைந்த லிங்கேஷ் பைக்கை விட்டுவிட்டு இறங்கி ஓடினார். உடனே பைக்கில் தீ மளமளவென பரவி கொழுந்துவிட்டு எரிந்தது.  

அருகில் இருந்தவர்கள் தண்ணீரை ஊற்றி அணைப்பதற்குள் பைக் முழுவதும் எரிந்து முற்றிலும் நாசமானது. பைக்கில் தீப்பிடிக்கும் முன்பே லிங்கேஷ் இறங்கியதால் தப்பினார்.  கடும் வெப்பம் காரணமாக விபத்து நேரிட்டிருக்கலாம் என போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் வெளிவந்தது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?