வாகன ஓட்டிகள் அதிர்ச்சி... ஏப்ரல் 1ம் தேதி முதல் தமிழகத்தில் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு!
தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் கீழ் 78 சுங்கச்சாவடிகள் செயல்பாட்டில் இருந்து வருகின்றன. கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் 12 சுங்கச்சாவடிகள் புதிதாக திறக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், தமிழகத்தில் சுங்க சாவடி கட்டனம் மேலும் உயர்த்தப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அந்த வகையில் தமிழகத்தில் ஏப்ரல் 1 முதல் 40 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்படவுள்ளது. சுங்கச்சாவடி கட்டணம் ரூ.5 முதல் ரூ.25 வரை உயர்த்தப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஏப்ரல் 1ம் தேதி 40 சுங்க சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்படும் நிலையில், எஞ்சி உள்ள 38 சுங்கச்சாவடிகளில் 2ம் கட்டமாக செப்டம்பர் 1 முதல் கட்டணம் உயர்த்தப்படும் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளது. சுங்கச்சாவடி கட்டணம் உயர்த்தப்படுவதால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!