undefined

எம்.பி. கதிர் ஆனந்த்துக்கு தொடரும் சிக்கல்!!  உயர்நீதி மன்றம்  அதிரடி !!

 


திமுகவின் முன்னோடிகளில் ஒருவரும் அமைச்சர் துரைமுருகனின் மகனுமான எம்.பி.கதிர் ஆனந்த் மீதான வருமானவரி வழக்கை ரத்து செய்ய உயர்நீதி மன்றம் மறுத்து வழக்கை தள்ளுபடி செய்தது. கடந்த 2012 -13ம் நிதியாண்டிற்கான வருமான வரி கணக்கை 2013ம் ஆண்டு செப்டம்பர் 30ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டிய கணக்கை  மார்ச் 29ம் தேதி தாக்கல் செய்ததுடன்,  2015ம் ஆண்டு செலுத்த வேண்டிய வரியை 2016ம் ஆண்டு மார்ச் 11ம் தேதி செலுத்தியுள்ளதாக கூறி,  வருமான வரித்துறை திமுக எம்.பி கதிர் ஆனந்துக்கு எதிராக வேலூர் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் வருமான வரித்துறை சார்பில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.


இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி 2017ம் ஆண்டு கதிர் ஆனந்த் சென்னை உயர்நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அதில், வருமான வரி கணக்குதாக்கல் செய்வதற்கும், வரிசெலுத்துவதற்கும் ஏற்பட்ட தாமதம் தொடர்பாக வழக்கு தொடர முடியாது. எனவே கதிர் ஆனந்த் மீது வருமான வரித்துறை தொடர்ந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று கூறியிருந்தார். வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியது தவறு. என்றும் கூறியிருந்தார். இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது, அப்போது கதிர் ஆனந்த் சார்பாக மூத்த வக்கீல் வில்சன் ஆஜராகி, சட்டப்படி தாமதமாக வருமான வரிக்கணக்கு தாக்கல் செய்தாலோ, தாமதமாக வரி செலுத்தினாலோ அபராதம் விதிக்க வருமான வரித்துறைக்கு அதிகாரம் உள்ள நிலையில், வருமானவரித் துறை தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி வழக்கு தொடர்ந்திருப்பது தவறானது.

அதை ரத்து செய்ய வேண்டும் என்றார்.வருமான வரித்துறை சார்பாக வக்கீல் ஷீலா, தாமதமாக வருமானவரி கணக்கு தாக்கல் செய்தது தொடர்பாக நோட்டீஸ்.அனுப்பும் வரை, கதிர் ஆனந்த், வருமானவரி செலுத்தவில்லை . என வாதிட்டார்.இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஆனந்த வெங்கடேஷ், வருமான வரிக்கணக்கை வேண்டுமென்றே தாமதமாக தாக்கல் செய்தாரா? வேண்டுமென்றே தாமதமாக வருமான வரி செலுத்தினாரா? என்பதை விசாரணை நீதிமன்றம்தான் முடிவெடுக்க முடியும் என்பதால், வேலூர் நீதிமன்றத்தில் உள்ள வழக்கு விசாரணையில் தலையிட முடியாது . வருமான வரித் துறைக்கு அதிகாரம் உள்ளதாகவும் கூறியதோடு கதிர் ஆனந்த மனுவை தள்ளுபடி செய்கிறேன் என்று என்பதால், அவர் மீது வழக்கு உத்தரவிட்டார்

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

பொலிவான பிரகாசிக்கும் சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்